Saturday, October 31, 2009

பட்டுப்பூச்சி!

பட்டாம்பூச்சியின் முதுகுச்சிறகில்
இயற்கை ஓவியன் வரைந்த ஓவியத்தின்
காப்புரிமையை எனக்களிக்க
பேச்சுவார்த்தை நடத்துகிறேன்,
பட்டாம்பூச்சியிடம்!!!

Friday, October 30, 2009

பயணம்..

ஒற்றை மலரே அழகு;
மலர்க்கூட்டம் அழகுக்கூட்டம் !
அழகுக்கூட்டங்களின் அணிவகுப்பில்,
தினமும் ஓர் அழகிய பயணம்.
இரயில் பயணம்.
இல்லத்திலிருந்து அலுவலகத்திற்கு!!..


பனிக்காலம்

அடடே!!!,
பூமித் தாய்க்கு குளிர்கிறதாம்;
பால் வண்ண 'பனிப் போர்வையை' போர்த்திக்கொண்டிருக்கிறாள்.
என்னே ஒரு முரண்பாடு!!!!

Thursday, October 29, 2009

வருக 'பனி' மங்கையே..

ஆதவனின் அதிகாரம் அடங்கியது,
பகல் இரவின் இருளில் தொலைகிறது,
மரங்கள் சிரம் கொய்து கொள்கின்றன,
கடிகாரம் கூட சோம்பேறியாய் 1 மணி பின்தங்கியது..
ஆம்,
திருமதி 'பனிக்காலம்' வருகை தருகிறாள்!!!!


Wednesday, October 28, 2009

முதல் நாள்..

ஓர் இலையுதிர்கால பின்னிரவில்
'அவளுடன்' தோள் சேர்ந்து நடந்துகொண்டிருந்தேன்.
எங்கள் மனம் மலர்ந்தது கண்டு,
மரங்கள் ஆனந்தத்தில் இலைக் கம்பளம் விரித்தது,
நடை பாதையில்...

Tuesday, October 27, 2009

இன்று முதல்....

ஓர் உணர்வு,
சந்தோஷிப்பதாய்;
மிதப்பதாய்;
பறப்பதாய்;
தவிப்பதாய்;
சிலாகிப்பதாய்;
எதிர்நோக்குவதாய்;
ஏற்பதாய்;
இழப்பதாய்;
ஜனிப்பதாய் ஆகிய பல உணர்வுகளின் சரிவிகித கலவையாய் படுகிறது.. காதல்!!??