நீங்கள் ஏற்கனவே ஊகித்ததுபோலவே இது என் முதல் வலைப்பதிவு.
நான் ஒன்றும் பெரிய கவிஞனோ, எழுத்தாளனோ இல்லை. எத்தனையோ எண்ணங்கள் என் மனதில் கூடாரமடித்திருந்தது, இருக்கிறது.. பலவற்றை பதிவு செய்ய ஒரு ஊடகம் தேவைப்பட்டது.. முடிவு செய்தேன்.. என்னை வெளிப்படுத்த, எனக்கு நானே பேசிக்கொள்ள, என்னை எழுதவேண்டுமென்று..
கணினி மயமாகிவிட்ட இவ்வுலகில், நானும் கணினியை உழுது உண்ணும் தொழிலாளி.. அதனாலேயே இவ்வூடகத்தை தேர்ந்தெடுத்தேன்.
இவ்வலைப்பூவில், நான் ரசித்தவற்றை, எனக்கு பிடித்தவற்றை, எனக்கு தோன்றியவற்றை, நான் சொல்ல நினைத்ததை, பதிவு செய்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
nanbarukku arambam arumai ,thodara valthukkal ...
ReplyDeleteNagaraj
www.infinityholes.blogspot.com